நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில், ஆங்கிலேயரை எதிர்கொண்ட தமிழ்ப் பெண்களின் வீர வரலாற்றைக் கூறும் நுால்.
ஒடிசாவில் துவங்கி, நேதாஜியின் தேசப்பற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் பேசுகிறது. இந்திய தேசிய ராணுவம் என்ற கட்டமைப்பை உருவாக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டதை நேர்த்தியாகச் சொல்கிறது.
பெண்கள் அங்கம் வகித்த முதல் படையில் இருந்த சிலரின் நேரடி அனுபவங்களை கூறுகிறது. இதில், தமிழக பெண்கள் போர்க்கொடிகளாக பங்கேற்ற வீரத்தைக் கூறுகிறது. போர் நிதிக்கு நகைகளை வழங்கிய உள்ளங்களை நினைவூட்டுகிறது. ஜெய்ஹிந்த் முழக்கம் உருவானதை விவரிக்கிறது. இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்றில், தமிழ்ப் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதை அறிய உதவும் நுால்.
– -டி.எஸ்.ராயன்