தலைப்பில் எழுதும் காரணத்தை விவரித்துள்ள விதமே அருமையாக இருக்கிறது.
அனைவரும் ஓட்டு போடும் உரிமையை அரசியல் சட்டம் தந்திருக்கிறது. அதை கடமையாக நினைத்து ஓட்டளிப்பது எத்தனை பேர்? ஓட்டளிக்கும் உரிமையால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்று எத்தனை பேருக்கு தெரிகிறது என்ற ஆதங்கம் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
எண்ண ஓட்டங்களை கடிதம் என்ற தலைப்பில் 52 கடிதங்களாகப் பதிவிட்டுள்ளார். ஏன் வாக்காளர் சட்டம் தேவை என்று ஆணித்தரமாக வாதங்களை முன் வைத்துள்ளார். விரிவான மற்றும் தெளிவான அலசல்.
‘நோட்டா’விற்கு ஓட்டு போடுவது தொடர்பான நிலையை படம் பிடித்து காட்டுகிறது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றிய குறிப்பு சிந்திக்க வைக்கிறது.
-– டாக்டர் கார்முகிலோன்