ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தது பர்மா. அது எப்படி தனி நாடாக மாறியது. மக்களாட்சி முறை அங்கு தழைக்காமல் இருப்பதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்துள்ள நுால்.
பன்முக கலாசாரம் உடைய நாடு பர்மா. மியான்மர் என்றும் அழைக்கப்படுகிறது. இது குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் ராணுவ ஆட்சியே நிலவுகிறது. உள்நாட்டு போர், வறுமை என கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நாட்டின் அரசியல் போக்கு ஆராய்ந்து அலசப்பட்டுள்ளது. வரலாற்று தகவல்களுடன் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. மொத்தம், 17 தலைப்புகளில் தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. அண்டை நாட்டில் நிலவும் அரசியல் சூழலை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– ஒளி