சுய முன்னேற்றத்தை சிந்திக்க துாண்டும் கருத்துள்ள நுால்.
உலகம் சிறப்பாக வாழ சிந்தனை, செயலால் பணியாற்றி புகழ் பெற்றவர்கள் பலர். உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ளனர். அவர்களைப் போல் சாதித்து பெருமையை நிலை நாட்டி வாழ்வதற்கு துாண்டுதல்களை தருகிறது.
சுய முன்னேற்றம் அடைய ஏழு பொருண்மைகளை அடையாளம் கண்டு, அவற்றில் பயிற்சி பெற வழிவகைகளை அறிவுரையாக தருகிறது. ஒவ்வொரு பொருள் குறித்தும் உரிய துணை தலைப்புகளில் தகவல்களை கோர்த்துள்ளது. ஒவ்வொன்றும் செல்லும் வழியை தெளிவு படுத்தி, அதில் பயணம் செய்ய வேண்டிய வழிமுறைகளை காட்டுகின்றன. நிதியை நிர்வகிப்பது குறித்த விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய முன்னேற்றம் துாண்டும் நுால்.
– மதி