அரசியல் பித்தலாட்டங்கள், ஆன்மிகப் போர்வையில் முறைகேடுகளை தோலுரித்த ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட வலி, வேதனைகளை பதிவாக்கியுள்ள நுால். பழிவாங்கும் அரசின் சதித்திட்டங்கள், பழிவாங்கும் வெறித்தனம், அடக்குமுறை, ஆள் கடத்தல், கொலை முயற்சி என நிகழ்வுகளை காட்சிப்படுத்துகிறது.
கேட்ட தகவல்கள், பொன்மொழிகளையும், வழிகாட்டு குறிப்புகளையும் உரிய இடங்களில் பதிவிட்டிருப்பது, வாசிக்க விறுவிறுப்பையும் சுவையையும் ஏற்படுத்துகிறது. சந்தன கடத்தல் வீரப்பனைச் சந்தித்த நிகழ்வு, கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டது, செய்தி வெளியிட்டமைக்காக கைது என, பல நிகழ்வுகள் சுவை குன்றாமல் உள்ளன.
உண்மையை உரக்கச் சொன்னதால் உண்டான ஊறுகளை நிரல்படுத்தும் ஆவண நுால்.
– புலவர் சு.மதியழகன்