பண்டைய பாண்டிய மன்னர்களின்தலைநகரமாகவும், வணிகம் கொழிக்கும் பகுதியாகவும் விளங்கிய கொற்கை பற்றி விரிவாகப் பேசும் நுால். பழமை வாய்ந்த நகரத்தைப் பற்றி விளக்குகிறது.
பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கி தற்போது சிறு கிராமமாக காட்சியளிக்கிறது. சிந்து சமவெளிப் பகுதியில் கொற்கை நாட்டின் முத்து கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் பழமைக்குச் சான்றாக விளங்குகிறது.
செல்வச் செழிப்பு மிக்கதாக விளங்கியதை விளக்குகிறது. அகழாய்வில், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய தகவல்களை அறிய முடிகிறது. நாணயங்கள் அச்சடிக்கும்தொழிற்சாலை இருந்ததாக விளக்குகிறது. கொற்கை அமைப்பு, நாகரிகம், வணிகத்தை விரிவாக விளக்கும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்