சித்தார்த்தன் என்ற கவுதம புத்தர் வாழ்க்கை வரலாறு நுால்.
துறவு நிலையில் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்ததை பார்த்த பிம்பிசார மன்னன், அரண்மனைக்கு அழைத்து துறவு காரணத்தை அறிந்துகொண்டார். நாட்டில் பாதியை தருவதாகக் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. உடலை புத்தர் வருத்தியது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஞான நிலையை அடைந்த பின் சாரநாத்தில் போதனைகளை துவங்கியது பற்றியும் குறிப்பிடுகிறது.
இரண்டாம் பகுதியாக புத்தர் ஜாதகக் கதைகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. மறுபிறவி போன்ற கதைகளும் இடம்பெற்றுள்ளன. இவை எடுத்துக்கூறி விளக்கும் நீதிக்குத் தான் முக்கியத்துவம் என புரிந்து படிக்க வேண்டும். இப்படி 35 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. புத்தர் பற்றி எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்