அன்பை மையப்படுத்திய கவிதைகளின் தொகுப்பு நுால். திறந்த வெளியை முத்தமிட்டால் கலையாக மாறும் என்கிறது. இலையுதிர் காலத்தில் சருகாய் பறக்கிறது உறவு என்ற கவிதை, உறவின் வலிமையை கூறுகிறது. குழந்தைகளின் குதுாகலத்தை, உன் விளையாட்டிற்கு பொம்மையாகிறேன் என அன்பாகச் சொல்கிறது.
பனி இரவு சாரலின் ரம்மியத்தை இதமாக வர்ணிக்கிறது. மவுனத்தை உடைத்தால் கிடைக்கும் எழுச்சியை திடமாக எடுத்துரைக்கிறது. மழை சொட்டும் மாலைப் பொழுதை மீளா நினைவுகளாக பதிய வைக்கிறது. இனிய நினைவுகளை புல்வெளியாய் கொண்டு வருகிறது. ஒரு மனதை, இன்னொரு மனது வீழ்த்த முடியுமா என கேட்க வைக்கிறது. புல்லில் அமரும் தட்டாம் பூச்சி போல், காதலும், காமமும் இருக்க வேண்டும் என்று மென்மையை சொல்லும் நுால்.
– -டி.எஸ்.ராயன்