பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி மொழிபெயர்ப்பாளரின் நாட்குறிப்பின் முக்கிய பகுதிகளை தொகுத்து தரும் நுால். நிகழ்வுகளையும், உரைநடை தெளிவையும் அறிய உதவும் வரலாற்று பெட்டகம்.
துபாசியாக பணியாற்றி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு பற்றி அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து, 28 தலைப்புகளில் குறிப்புகளை தொகுத்து தருகிறது.
புதுச்சேரி மதுவிலக்கு துவங்கி, திகிலில் செத்து போகும் ஜனங்கள் என்பது வரை ஆர்வமூட்டும் வகையில் குறிப்புகள் உள்ளன.
நிகழ்வுகளை அந்த காலத்து நடையில் பதிவு செய்துள்ளது. ஐரோப்பியர் செயல்பாடு, உள்ளூர் மக்களுக்கிருந்த பிரச்னை பற்றி எல்லாம் குறிப்பிடுகிறது. அரிய வரலாற்று பெட்டகமாக விளங்கும் நாட்குறிப்பு நுால்.
– ராம்