பழைய சோறின் மகிமை குறித்து துணிச்சலுடன் இளஞர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் விளக்கங்களை தரும் நுால்.
சமைத்த 100 கிராம் சோறில், 3.4 மில்லி கிராமாக இருக்கும் இரும்புச் சத்து, பழைய சோற்றில் 73.91 மில்லி கிராம் வரை அதிகரிக்கிறது. சோடியம் உப்பு குறைகிறது. பொட்டாஷியம், கால்ஷியம் அளவு உயர்கிறது.
காலையில் நீராகாரம், பழைய சோறு, தயிர், சிறிய வெங்காயம் சாப்பிட்டால் மூல நோயைக் கட்டுப்படுத்தும். வெங்காயத்தில் உள்ள சக்தி, ரத்தத்தில்உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது. பெருங்குடல் அழற்சி நோய்க்கு அறுவை சிகிச்சைக்குப் பதில் பழைய சோறு மருந்தாகிறது. உணவு பற்றி சிந்திக்க வைக்கும் நுால்.
– இளங்கோவன்