அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்குப் புரியும் வகையில் தரும் நுால். புத்தகத்தின் முதல் பாதியில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும், பண்பு நலன்களும் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் 122 சிந்தனைகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதையும், மதத்தின் தன்மையையும், அரசியல் சூழலையும் அப்படியே வெளிப்படுத்துகிறது. அம்பேத்கரின் படங்களை வாழ்க்கையுடன் இணைந்தவற்றையும் இடையிடையே அமைத்து உள்ளது சிறப்பாக உள்ளது.
இரண்டு டாக்டர் பட்டங்களையும், பாரிஸ்டர் பட்டத்தையும் பெற்று போற்றப்படுவதைக் குறிப்பிட்டு உள்ளது. வறுமையான சூழலில் வாழ்ந்தாலும், கல்வியால் உயர்ந்த நிலையை அடையலாம் என கூறும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்