தொழிலாளர் தின கொண்டாட்டத்தை இந்தியாவில் துவங்கிய ம.சிங்காரவேலரின் மேன்மை சிந்தனைகளை வெளிப்படுத்தும் நுால். அவரது நினைவைப் போற்றி சென்னை பல்கலைக் கழகம் நடத்திய சொற்பொழிவு புத்தகமாக்கப்பட்டுள்ளது.
பொதுவுடமை தத்துவத்தை கடைப்பிடித்த சிங்காரவேலர், அதை பரப்புவதில் தீவிர அக்கறையுடன் செயல்பட்டார். அறிவியல் சிந்தனையுடன் அவரது செயல்பாடு பல கோணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் அமைத்திருந்த நுாலகம், அதில் அரிய புத்தகங்கள், தற்போது ரஷ்யா, மாஸ்கோ நகர நுாலகத்தில் தனிப்பிரிவாக பராமரிக்கப்படும் தகவல் வியப்பளிக்கிறது. கற்பதும், கற்பிப்பதுமாக இருந்த உயர்ந்த வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நுால்.
– ஒளி