அறிவியல் செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டும் படைக்கப்பட்ட நாவல் நுால். சமுதாயம் இயற்கையை பாதுகாத்து இயைந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதும், அதன் குறியீடாக கதை மாந்தர்களாக பறவைகள், விலங்குகள், செடிகளாக உருவகித்திருப்பதும் தனித்த கவனம் ஈர்க்கிறது.
வன நிலங்கள் பறிக்கப்படுவதையும், மரங்களின் புனிதங்கள் நசுக்கப்படுவதையும், நீர் நிலைகள் பாழ்பட்டிருப்பதையும் மாற்ற எண்ணும் மரங்கள், செடிகள், பறவைகள், மனிதன் மேல் குற்றம் சுமத்துவதே கரு. மனிதனை விசாரித்து உரிமையை பல்லுயிரினங்கள் நிலைநாட்டுவதை பேசுகிறது. கதாபாத்திர பெயர் பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது. இயற்கை மீதான ஆர்வம் உடையோருக்கு உகந்த நுால்.
– ஊஞ்சல் பிரபு