திருவண்ணாமலையில் தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், மகான்களும் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். நாடி வரும் பக்தர்களுக்கு, தவ ஆற்றலால் அருள்பாலித்து வாழ்க்கையை உயர்த்துவதைக் கூறுகிறது.
சித்தர் இடைக்காடர் முதல், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், ஸ்ரீஅம்மணி அம்மாள், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், விட்டோபா சுவாமிகள், சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் பற்றி குறிப்பிடுகிறது.
பகவான் ரமணர், ஞானானந்தகிரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் என மகா ஞானிகளின் தெய்வீக வாழ்க்கை, உபதேசங்கள், நிகழ்த்திய அற்புதங்கள், பின்பற்றிய சீடர்கள் போன்ற தகவல்கள் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள நுால்.
– இளங்கோவன்