ஈரானின் சர்வதேச அரசியல் சூழலை விவரிக்கும் நுால். இந்திய நிருபரின், நேரடி கள ஆய்வு வழியாகக் கூறுகிறது.
ஈரான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. கச்சா எண்ணெய் அரசியல் குறித்தும், டாலர் மதிப்பு, அமெரிக்கா போடும் கணக்கு குறித்தும் பகிர்கிறது. ஈரானில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமை, உடை கட்டுப்பாடு, அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பதிய வைக்கிறது.
போரும், போரால் ஏற்படும் இழப்புகள், எதிரி நாட்டுக்கு கிடைக்கும் ஆதாயம், பொருளாதார வீழ்ச்சி, அதனால் நிம்மதி இழக்கும் மக்களின் மனநிலை குறித்து விரிவாக அலசுகிறது. ஈரான் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு விடை சொல்லும் நுால்.
– டி.எஸ்.ராயன்