புராணப் பாத்திரங்கள் கொடுத்த சாபம், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டம், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரத்தை தொகுத்து தரும் புத்தகம். பணம், நிறம், ஒட்டு கேட்டல் பிரச்னைகளால் சாபம் கொடுக்கப்படுகிறது.
விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் பற்றி படித்திருப்பீர்கள். அது பெற்ற சாபம் பற்றி சுவையான தகவல் உள்ளது. மஹாலட்சுமி சிவப்பழகால் கொண்ட கர்வம் காரணமாக சாபம் பெற்று பூலோகத்துக்கு வந்ததை சொல்கிறது.
சாபத்தின் விளைவால் பூமிக்கு வந்திருக்கிறோமோ என எண்ண வைக்கும் வகையில், 30 வகை சாபங்களை பெற்றவர்கள், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
-– தி.செல்லப்பா