ஜி.எஸ்.டி., மற்றும் மறைமுக வரிகள் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை போக்கும் ஆங்கில நுால். பயணங்களிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.
இந்த புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதியில் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பு நிர்வாக நடைமுறைகளை மிகச் சிறப்பாக தருகிறது. அடுத்துள்ள பகுதியில் சுங்க வரி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வரி விதிப்பு நடைமுறைகளை விளக்குகிறது.
மொத்தம், 35 தலைப்புகளில் வரி விதிப்பு தொடர்பான விதிமுறைகள் உள்ளன. வரி செலுத்துவோர், சி.ஏ., தேர்வு எழுதுவோர், வரி விதிப்பை அமல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்வோருக்கு உதவும் அரிய கையேடு.
– மதி