வங்கி தேர்வில் சாதனை படைக்க, தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாசலம் முயற்சியுடன் உருவாக்கியுள்ள நுால். எளிதாக புரிந்து படிக்கும் வகையில் உள்ளது.
இந்நுாலில் கணிதம், பகுத்தறியும் திறன், ஆங்கிலம் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக குறிப்புகள், பார்முலாக்கள், நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை தெளிவாகவும், நேர்த்தியாகவும் திறம்பட தொகுத்து கொடுத்துள்ளார் ஆசிரியர்.
ஐ.பி.பி.எஸ்., வங்கி தேர்விற்கு மட்டுமல்லாமல், எஸ்.பி.ஐ., நடத்தும் வங்கி தேர்விற்கும், எல்.ஐ.சி., நேஷனல் இன்ஸ்ஷூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்த புத்தகத்தில், 10 மாதிரி தேர்வு கேள்வித்தாள்கள் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் நடந்த எஸ்.பி.ஐ., கிளர்க் பணியிட தேர்வு கேள்வித்தாளும், விடைகளுடன் பயிற்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
பாடக் கருத்துகளில் தெளிவு, தொடர் பயிற்சி, நேர மேலாண்மை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவையே வெற்றி பெற அவசியமானவை என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.
இதில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி தேர்வுகளுக்கான வினாக்கள், மாணவர்களின் திறமையை நன்கு கூர்மைப்படுத்தி உதவும்.
வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வைக்கும் என்பதில் ஐயமில்லை. வங்கி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்நுால் ஒரு வரப்பிரசாதம்!
– சிவசு