அம்மன் பக்தர்கள் தரிசிக்காத நுாற்றுக்கணக்கான கோவில்கள், பாரத மண்ணில் உள்ளன. அங்கெல்லாம் சென்று வர வழிகாட்டும் நுால்.
குமரியில் துவங்கி, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அம்மன் கோவில்கள் பற்றிய தொகுப்பாக உள்ளது. வரலாறும், செல்லும் வழியும் மட்டுமல்ல; ஒவ்வொரு அம்மனுக்கும் உரிய 108 போற்றியும், பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
எவ்வளவோ சிரமப்பட்டு தகவல்களை சேர்த்திருப்பது படித்தால் புரியும். எல்லாரும் புத்தகத்துடன் அருள் தரும் அம்மன் கோவில்களுக்கு புறப்படுங்கள்; அம்பாளை தரிசித்து நலன்களை பெற்று வாருங்கள். சக்தியின்றி சிவமில்லை என்ற வாசகத்தை நிரூபிக்கும் நுால்.
– தி.செல்லப்பா