சிக்கன பயன்பாடு, நதிகளை இணைத்தல் போன்ற திட்டங்களால் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்று ஆலோசனை கூறும் நுால்.
இந்தியாவில் பெய்யும் மழையை முறையாக அறுவடை செய்தால், தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று கூறுகிறது. கரிகாலன் கல்லணையை, சிங்களக் கைதிகள் கொண்டு கட்டினான் என்கிறது. ராஜராஜ சோழன் உருவாக்கியது வீராணம் ஏரி என்ற தகவலை தருகிறது.
ராஜஸ்தான் தண்ணீர் பிரச்னையை ராஜேந்தர் சிங் தீர்த்த விதத்தைக் கூறுகிறது. ஆறுகள் இணைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. தமிழகத்தில் நீர் சேமிப்பு சரியில்லாததால், தண்ணீர் பஞ்சம் உள்ளது என்கிறது. சமூக வளர்ச்சிக்கு உதவும் பயனுள்ள நுால்.
– முனைவர் கலியன்சம்பத்து