விழுப்புரம் மாவட்ட வரலாறு, பண்பாடு, கலாசாரம் தொடர்பான தகவல்களை தொகுத்து களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ள நுால். புவியியல் ரீதியாக வளத்தையும் தெளிவாக விவரிக்கிறது.
மாவட்டத்துக்கு உட்பட்ட அறிவியல் விந்தைகள், தொல் பழங்கால பாறை ஓவியங்கள், குறியீட்டுடன் கூடிய பானையோடுகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியது. சங்க இலக்கிய பாடல்களில் இடம் பெற்றுள்ள ஊர் பெயர்கள், அரசுகளின் எழுச்சி வீழ்ச்சி பற்றிய வரலாற்று செய்திகளையும் கொண்டுள்ளது.
கோவில் கட்டடக்கலை, சிற்பம், ஓவியங்கள், கோட்டை கொத்தளங்கள், சுதந்திர போராட்டம் பற்றியும் தரப்பட்டுள்ளது. மண்ணை வளமாக்கும் ஆறுகள், ஏரி, குளங்கள், சதுப்பு நிலக்காடுகள் பற்றியும் குறிப்பிடுகிறது. அரிய ஆவணமாக திகழும் நுால்.
– ராம்