வீரமா முனிவரால் எழுதப்பட்ட நகைச்சுவை கதைகளின் தொகுப்பு நுால். குரு, சீடர் அடிப்படையில் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வீரமா முனிவரின் சுருக்கமான வரலாறு முதலில் உள்ளது. தொடர்ந்து அவர் உருவாக்கிய, 14 கதைகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. அறியாமையால் வரும் அவலங்களை கதைகள் அறிவுறுத்துகின்றன.
வீரமா முனிவர் காலத்தில் வாழ்ந்த துறவியர் நிலையை எடுத்துரைக்கிறது. தமிழக மக்களிடையே புழக்கத்தில் இருந்த கதைகளை கேட்டு, ஐரோப்பியர் படைத்துள்ளது மிகவும் வியப்பு தருகிறது. கற்பனை போல் தோன்றினாலும், வாழ்க்கையில் பாடம் புகட்டும் வகையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையிலும் உள்ள நகைச்சுவை, சிரிக்க சிந்திக்க வைக்கின்றன. அறிவூட்டும் கதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்