பெண்கள் வென்று அதிகாரம் கிடைத்தால், அரசியலில் புதிய எதிர்காலம் பிறக்கும் என்றுரைக்கும் நுால். அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் அறைகூவலாக உள்ளது.
அரசியல் வரலாற்றில் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சிக்காக பெண்கள் அதிகாரம் பெறுவது. அது, வன்முறை, மத அடாவடி, ஜாதி வன்மம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை இல்லாமல் செய்யும். உண்மையான சமத்துவத்தை கொண்டு வரும் என உரைக்கிறது.
பெண்களின் அணுகுமுறை, மென்மையான பல அணுகுமுறைகளுக்கு வழிவகுக்கும். போர், போராட்டம், தேவையற்ற வன்முறை போன்றவற்றை அவசியமற்றதாக்கும். வாழ்வில் புதிய திருப்புமுனை ஏற்படும் என்கிறது. பெண்களுக்கான அரசியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அனுபவங்களின் பகிர்வு நுால்.
– ராம்