துபாயில், 41 ஆண்டுகள் வசித்த அனுபவங்களை சுவாரசியத்துடன் கூறும் நுால். அழகிய குடும்பம், இனிய இல்லறம் தலைப்புகள், பயணம், நகை கடை சுவாரசியத்தை பகிர்கிறது. மருத்துவமனை இருக்கையில் அமர்வதை மதம் கடந்து மனிதர்களை மதிக்க கற்றுக் கொடுக்கிறது. அலுவலக பணிச்சூழல், அங்குள்ள நடைமுறைகள், உரையாடல்களில் உள்ள அர்த்தங்களை விவரிக்கிறது.
தடைபடாத மின்சாரம், சுத்தமான குடிநீர், அச்சுறுத்தல், குறுக்கீடு, கமிஷன் இல்லாத தொழில்கள் போன்ற சிறப்புகளை துணிச்சலுடன் சொல்கிறது.பாலைவனமாக இருந்து முன்னேறியதை உதாரணங்களுடன் விளக்கியுள்ளது. இலக்கியவாதிகளுடன் ஏற்பட்டிருந்த நட்பை விவரிக்கிறது. வளமற்ற நாடு செல்வத்தில் உயர்ந்து நிற்பதைக் காட்டும் நுால்.
– -டி.எஸ்.ராயன்