கல்வி குறித்து விவரிக்கும் நுால். பயிலுதல், புரிந்து கொள்ளுதல்,செயல் வழி கற்றல், பகிர்ந்து கொள்ளுதல் என்ற அம்சங்களுடன் போதிப்பவரே சிறந்த ஆசிரியர் என்கிறது.
பள்ளிக்கூடம் தாயைப் போன்றது; அரவணைக்கவும், ஆறுதல் கூறவும், அறிவை வளர்க்கவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது. பள்ளிகள் உருவாக அனைவரின் பங்களிப்பும் முக்கியம் என்று எடுத்துரைக்கிறது. கல்வியில் சாதித்த பெண்களை அடையாளப்படுத்துகிறது. கல்வியின் மகத்துவத்தை உரைக்கும் நுால்.