தனிமனிதன் முழுமையான விடியலை அடையும்போது, இந்தியாவும் விடியலைப் பெற்றிருக்கும் என உணர்த்தும் நுால். இரண்டு பாகங்களாகப் பிரித்து, 15 அத்தியாயங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமைக்குத் தடையாக இருப்பதை தகர்க்கும் வழிமுறை காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் ஒற்றுமைக்கு வித்தாக இருக்கும் தன்மைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. தேசத்தை முழுமையாக உருவாக்கும் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. வகுப்புவாதம், மதவாதத்தை சுட்டிக்காட்டுகிறது.
கல்வியும், சீர்திருத்தமுமே புதிய விடியலுக்கு அழைத்துச் செல்லும் என எடுத்துரைக்கிறது. ஒவ்வொருவரும் ஒற்றுமையாய் செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் புத்தகம்.
– முகிலை ராசபாண்டியன்