சிந்துவெளி கண்டெடுப்புகளை எவருக்கும் புரியும் எளிய நடையில் தந்திருக்கும் பயனுள்ள ஆய்வு நுால். ஹரப்பா நகர நாகரிகத்தில் கோலோச்சிய மொழியே தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று கிளைத்ததாகக் கூறுகிறது. ஹரப்பா மொழி இலக்கணச் சாயல் நான்கு மொழிக்கூறுகளிலும் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
சுமேரியர் காலத்தில் பரவலாகி இருந்த வெட்டெழுத்து, ஆப்பெழுத்தை மாதிரிகளாகக் கொண்டு புதிய குறியீடுகளை வடிவமைத்ததை உரைக்கிறது. அந்த வல்லுநர் குழுவை முன்மொழிகிறது. எழுத்துத் தொடர்களை ஒலியியல் வழியில் பகுத்துக் காட்டுகிறது. எண்ணற்ற மொழி ஆராய்ச்சித் தகவல்களுடைய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு