கிராமத்து மனிதர்களின் அன்றாட பழக்க வழக்கங்களையும், பண்பாட்டு சூழலையும், வாழும் முறையையும் மையமாக்கியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மதுரை வட்டார வாழ்வு முறையை சுவாரசியமாக சொல்கிறது.
வழக்கொழிந்து போன பழமையான கிராமிய சொற்களை அதிகமும் கதைகளில் காண முடிகிறது. அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் துாய தமிழ் சொற்கள் எளிமையாக தரப்பட்டுள்ளன.
பெரும்பாலான கதைகள் விவசாயம் சார்ந்தவை. அவை சார்ந்த வேலைகள் மையமான நிகழ்வுகளை விவரிக்கின்றன. விவசாய நடைமுறை, அதற்கான கருவிகள், மக்கள் அவற்றுக்கு வழங்கும் மரியாதை பற்றி எல்லாம் சொல்லப்படுகிறது. மண்ணை வளமாக்கும் மனிதர்களை அடையாளம் காட்டுகிறது. கிராம வாழ்க்கையின் ஒட்டு மொத்த சாராம்சத்தை எளிய நடையில் சொல்லும் நுால்.
– மதி