வாழ்வு சிறக்க முன்னோர் ஆசி, குல தெய்வ வழிபாடு, நட்சத்திர அதிபதியை வணங்குதல், ராசி அதிபதியை வணங்குதல் தேவை என்று கூறும் நுால்.
குழந்தை பிறந்த நேரத்தில் எந்த நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறதோ, அது தான் ஜென்ம நட்சத்திரமாம். ஒரு நட்சத்திரத்தில் நான்கு பாதங்கள் உண்டு; ஒன்பது பாதங்கள் ஒரு ராசி என்கிறது. 12 ராசிகளுக்கு 108 பாதங்கள்.
நட்சத்திரங்களுக்கு உரிய அதிபதி, தோற்றம், தேவதை, அதிதேவதை, வழி நடத்துவோர் இதற்கான சைவக் கோவில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. நான்கு பாதத்திற்குரிய வைணவக் கோவில் விபரமும் உள்ளது. ஜோதிட அன்பர்களுக்கு உதவும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து