திருமுறை பதிகம் பாட நேரமில்லாதவர், ஒரு பத்தியாவது பாடலாமே என்ற நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால்.
அப்பர் பெருமானின் தேவாரப் பாடல்கள், உள்ளம் குழைந்து உருகும். சேந்தனார், பரணதேவர் பாடல்களும் உள்ளன.
பன்னிரு திருமுறை, அதைப் பாடிய அருட்பெருமக்கள் எவர், பாடல்களின் எண்ணிக்கை துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுடன் வரையப்பட்டுள்ள சித்திரம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. இது, பிறவிப் பிணியில் இருந்து விடுபட உதவும். அவசியம் படிக்க வேண்டிய நுால்.