யந்திர ஆரூடத்திற்கு தொடு குறி என்றும் பெயர். விரல் நுனியால் தொட்டு, பலனறிவதை விளக்கும் நுால்.
கட்டத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் வடித்து, கண்களை மூடி குல தெய்வத்தையும், அகத்திய முனிவரையும் வணங்கியபடி கோரிக்கையை மனதில் நினைத்து, ஒரு எண்ணை தொட்டு பலன்களை தெரிந்து கொள்ளலாம் என்கிறது.
பாடலுக்கு விளக்கமும் எளிய நடையில் தரப்பட்டு உள்ளது. சதுரத்தில் 64 கட்டங்களும் எண்களால் நிரப்பப்பட்டுளளன. இந்த ஆரூட யந்த்ரத்தை யாரும் பயன்படுத்தலாம். அகத்தியருக்கு போற்றி கூறப்பட்டுள்ளது. அகஸ்தியர் அஷ்டோத்தர சத நாமாவளியும் உள்ளது. எண் ஆரூட பலன் பார்ப்போருக்கு உதவும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து