மனவியல் மற்றும் குணவியலை மையமாகக் கொண்ட நுால். ஒரு புள்ளிக்கு நகர்வது பயணம் என்றால், இரண்டையும் இணைப்பதற்கான வழியே பாதையாகிறது. அதுதான் வாழ்க்கை எனப்படுகிறது. இவ்விரு புள்ளிகளே பிறப்பும், இறப்பும் என்கிறது. பக்தி என்பது இருட்டு பயணத்தில் பாதையை காட்டும் விளக்கு. தன்னையே தராசில் வைத்து, சுத்த மனதோடு சுய பரிசோதனை செய்தால், தவறு இழைப்பது குறையும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் கபடம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வும், இச்சமுதாயத்தில் பங்கு பெற்றுள்ள அனைத்து தரப்புகளையும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து அமைந்துள்ளது என உரைக்கிறது. தத்துவ முத்துக்கள் உடைய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து