சமூக நடைமுறைகளை நுட்பமாக அணுகி, படைக்கப்பட்ட மெல்லிய கவிதைகளின் தொகுப்பு நுால். முரண்களையும், முரண்களால் வரும் பிசகையும் மென்மையாக உணர்த்துகிறது.
வாழ்வின் உண்மை போக்கை புரிய முயலாத சமூகத்தை, ‘செத்த பிறகு சிலை வைப்பதுதான் தமிழர் நாகரிகம்’ என ரசனையுடன் கூறுகிறது. காட்சிப்பிழை உணர்வுக்குரியது அல்ல என்பதை, ‘பசுவை, மாடு என்று அழைத்தாலும் அவை கவலைப்படுவதில்லை’ என பகடி செய்கிறது.
முள்ளும் மலரும் என்ற தலைப்பில், ‘முள் மரத்தில் இருந்து விழுந்த நிழல் என்னை குத்தவில்லை... மலர் என்று நெருங்கினேன் அங்கே முள்’ என சிந்திக்க துாண்டுகிறது. சிக்கல்களின் பின்னணியை காட்சியாக குவித்து, கருத்தை மனதில் பதிய வைக்கிறது. நவீன வாழ்வுமுறைக்கு அடிப்படையாக சிந்திக்க துாண்டும் நுால்.
– ஒளி