அறிவியல் செய்திகளை கதை போல் விவரிக்கும் நுால்.
இரண்டு புறாக்களின் உரையாடல் போல் அறிவியல் தகவல்களை சொல்கிறது. மின்னல் வழி மின்சாரம் என, அடிப்படைத் தகவல்களை தருகிறது. தொடர்ந்து மின் ஆற்றலை பற்றிக் கூறுகிறது. சூரிய ஆற்றல் பயன்பாடு, மின்சார வினியோக நடைமுறை என பல்வேறு தகவல்களை உரையாடல் வழியாக பதிய வைக்கிறது.
அணு, நிலக்கரியை பயன்படுத்தும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும், உயிரினங்களுக்கு அது கேடாக உள்ளதையும் தெளிவுபடுத்துகிறது. சுற்றுச்சூழல், உயிரினங்கள் பாதுகாப்பு போன்ற சிந்தனைகளுடன் அறிவியல் வளர்ச்சியை அறிமுகம் செய்கிறது. சிறுவர்களுக்கு உகந்த அறிவியல் உரையாடல் நுால்.
– ராம்