பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விபரங்களை உடைய நுால். இயற்கையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ளது.
காற்று, தண்ணீர் மாசுபடுதல், கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், அணு ஆயுதச் சோதனைகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பேசுகிறது.
அளவுக்கு அதிகமாக ஒலியால் ஏற்படும் கேடுகள், மண் வளம் அழிந்தால் வரும் பாதிப்புகள் குறித்து ஆழமான பார்வையுடன் விபரங்களை தொகுத்து தருகிறது.
குப்பை பராமரிப்பு, இயற்கையின் அரிய சக்திகளை பாதுகாப்பதன் அவசியம், உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வளர்ச்சியை திட்டமிடுவதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால்.
– ஒளி