சுதந்திர இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். வலைப் பூவை ஒரு கருவியாக செய்து, மலரும் மொட்டையும் முதிர்ந்த விருக் ஷத்தையும் உரையாடச்செய்தது அருமையான உத்தி. சுதந்திர தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடுவதை விரும்பவில்லை காந்திஜி. மக்கள் பட்டினியில் வாடும்போது இனிப்பு உண்டு கொண்டாடுவதை குற்றமாகவே கருதினார்.
காந்திஜியை கொலை செய்தபோது, ‘ஹே ராம்’ என உச்சரித்து மறைந்தார் என்ற செய்தியின் உண்மைத் தன்மையை விளக்குகிறது. பத்திரிகையாளரின் ஊகத்தின் அடிப்படையில் செய்தி நிஜம்போல் பதிய வைக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறது. இவ்வாறு அறியாத சுவையான தகவல்களின் தொகுப்பாக அமைந்துள்ள நுால்.
-– இளங்கோவன்