உண்மையான உலக அதிசயம் திருக்கோவில்கள் தான் என்ற கருத்தை வலியுறுத்தும் நுால். ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாய் நிற்பவற்றில் பொதிந்திருக்கும் அதிசயங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. சிற்ப நுணுக்கங்கள் சிலிர்க்க வைக்கின்றன.
முதல் மூன்று அதிசயங்களை பட்டியலிட்டு, யாளி வாயில் உருளும் கல்பந்து, சுழலும் தாமரை, எறும்புகளும் நுழையும் வண்ணம் மெல்லிய நுண்ணிய துவாரம் என பட்டியல் நீள்கிறது. திருவலஞ்சுழி பலகணி பற்றிய விபரங்கள் பிரம்மிப்பூட்டுகின்றன.
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட முறை விரிவாக விளக்கி சொல்லப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத காலத்தில், கோவிலில் வெளிச்சத்தை அதிகரிக்க கையாண்ட வழிமுறையும் சொல்லப்பட்டுள்ள புத்தகம்.
– டாக்டர் கார்முகிலோன்