கன்னியாகுமரி நிலப்பரப்பை மையப்படுத்திய வாழ்க்கைச் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு நுால். பொதுவெளியை கூர்ந்து நோக்கி படைக்கப்பட்டுள்ளது.
அவலச்சுவை நிறைந்த வாழ்வு ஓவியம் போல் வரைந்து காட்டப்பட்டுள்ளது. உயிர்ப்பூட்டும் கதாப்பாத்திரங்கள், ஆழமான வட்டார உரையாடல் தனித்துவத்துடன் உள்ளது. வாழ்க்கையை, இயக்க சூழலை சார்ந்து சொற்சேர்க்கை வழியாக தோலுரிக்கின்றன.
மனித மாண்பை குலைக்கும் செயல்கள் சமூக இயக்கத்தில் தீவிரமாகி உள்ளதை பிரதிபலிக்கிறது. வாழ்வின் போதாமையை மிகவும் நுட்பமாக வெளிப்படுத்துகிறது. வட்டாரம் சார்ந்து எளிய மக்கள் வாழ்வு அவலத்தின் தீவிரத்தை காட்டும் படைப்பு நுால்.
– மதி