குழந்தை வளர்ப்புக் கலையை அனுபவம் வழியாக சுவைபட விவரித்திருக்கும் நுால். சம்பவத்தால் வரும் பிரச்னை, தீர்வு என சொல்கிறது.
கருணைக்கிழங்கை பச்சையாக தின்றால் நாக்கில் அரிக்கும். அது பச்சிளம் குழந்தைக்கு தெரியாது. அது மாதிரி காய், கனி பெயர், பயன், உபயோகிக்கும் விதம் சொல்லிக் கொடுத்தால் உதவும். குழந்தைக்கு எட்டாத உயரத்தில் கதவு தாழ்ப்பாள் இருக்க வேண்டும்.
இது, வருமுன் காக்கும் பழக்கத்தை உருவாக்கும்; பிரச்னைகளை தவிர்க்கும். ருசிக்காக இன்றி பசிக்கும் போது ஊட்ட வேண்டும். தாலாட்டு, பிள்ளைக்கு துாங்க மட்டுமல்ல; துாக்கத்தில் உள்ளுணர்வு விழித்திருக்கவும் உதவும். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்