சிறுவர் வாசிப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் நுால்.
புத்தகம் வாசிப்பு என்பதே இல்லாததாக இந்த தலைமுறை உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகண்டு, பெற்றோர் பலரும் வருத்தமடைகின்றனர். மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கும் சிறுவர் – சிறுமியரை மீட்க, புத்தக வாசிப்பை வழங்குவதே சரியான வழிமுறை.
இந்த புத்தக கதையை குழந்தைகளிடம் படித்துக் காட்டுங்கள்; அடுத்து என்ன நடக்கும் என கவனிப்பர். கதையின் போக்கைக் கண்டு குதுாகலித்து வாசிக்கத் துவங்குவர். கதை நாயகர்களான விகுலன், நகுலன் சந்திக்கும் எதிர்பாராத பிரச்னைகள் வியப்பூட்டும். பள்ளி செல்லும் சிறுவர்களை உற்சாகப்படுத்தி, கற்பனை வளத்தை அதிகப்படுத்தும் நுால்.
– சி.கலாதம்பி