வாழ்க்கை திறனை மேம்படுத்த உரிய நம்பிக்கை வழங்கும் நுால். ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்துக்கு உள்நோக்கிய பயணம் முக்கியமானது என்பதை எடுத்துரைக்கிறது.
அன்றாடம் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதை சுய முன்னேற்றத்தின் அடிப்படையாக கூறப்பட்டுள்ளது. செயல்களை மெருகேற்றிக் கொள்வதற்கு உள்நோக்கு பயணம் இனிதாக உதவுகிறது. அதற்கு உரிய உத்திகளையும், பயண வழியையும் வகுத்து தருகிறது.
சுயசிந்தனை பற்றிய மதிப்பீட்டு கேள்வி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எழும். அது, என்ன செய்கிறோம் என்பதல்ல; சிந்தனைகள், எண்ணங்களை, எப்படி உருவாக்கி ஓர் விஷயத்தை அணுகுகிறோம் என்பதை குறிப்பிடுகிறது. இதுவே சரியான பயணத்துக்கு வழிகாட்டி வெற்றிப்படி ஏற வைக்கும். சுயம் சார்ந்த நுால்.
- – ஒளி