புதுவயல் செல்லப்பனின் மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். முழுதும் கவியரங்கங்களில் பாடப்பட்டவை அடங்கியுள்ளன.
சமயம், நாடு, சமூகம், தேசிய ஆளுமைகள், காப்பியக் கதைமாந்தர்கள் மீதான மரபுக்கவிதைகள் நிறைந்துள்ளன. சமயம் சார்ந்து கைலாச விநாயகர் என் தந்தை, ஆதம்பாக்கம் நாகமுத்து மாரியம்மன், மகமாயி, சண்டேசுரர், காஞ்சி முனிவர், ராமாவதாரம், அனுமன், கல்கி அவதாரம், ஆதிசங்கரர், பாம்பன் சுவாமிகள், சாய்பாபா குறித்த நீண்ட கவிதைகள் பக்தி நோக்கை வெளிப்படுத்தும்.
நாட்டுப்பற்று, மதச்சார்பின்மை, கல்வியின் சிறப்பு, தேர்தல் அரசியல், வறுமை, பட்டினி போன்ற பொருண்மைகளில் சமூக மேம்பாடு சார்ந்த கருத்தோட்டங்களையும் காண முடிகிறது. மரபு கவிதை நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு