குழந்தை வளர்ப்பு குறித்து எழுதப்பட்டுள்ள நுால்.
ஆசிரியர்களின் அன்பான அணுகுமுறை, நேர்மறை சிந்தனை விதைத்தல், அறிவுரை ஒருவழிப் பாதையாக இல்லாதிருத்தல், வீட்டுப்பாடம், போன்றவற்றை கவனமாக கையாளுதல் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. தேடலும் தேர்வும் இருப்பதை கண்டறிந்து ஒழுங்கு முறையை கற்பிப்பதோடு ஒழுக்கத்தையும் சுட்டிக் காட்டல் வேண்டும்.
மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. பள்ளிக்கு முறையாக வரும் எல்லாரையும், உயர் கல்விக்கு தகுதி உடையோராக்க வேண்டும் என்கிறது. புதிய கற்றல் முறையை உருவாக்க முடியும் என பல தரவுகள் வழியாக விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்