ஆன்மிகநெறி குறித்த கருத்துக்களை தெளிவாகக் கூறியுள்ள நுால். ஒவ்வொரு தலைப்பிலும் 100க்கும் மேற்பட்ட புதையல்கள் உள்ளன. அமரத்துவம் என்பது சத்தியம், தர்மம், நியாயம், அன்பு, அருள் என்பதை கடைப்பிடிப்போருக்கு நிச்சயம் என்ற கருத்து தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் மனிதனால் சூரியனுக்கு சென்று 10 நாள் ஓய்வெடுத்து திரும்பி வர இயலவில்லை என்ற கேள்வி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதன் தனக்குத்தானே ஏமாற்றிக் கொள்வான்; மற்றவரையும் ஏமாற்றுவான்; ஏமாறுவதும் ஏமாற்றுவதும் அதிசய செயல்களாகும். நாக்கு ருசி தேடும் மனிதன், ஏன் ஆத்ம ருசியை தேடக்கூடாது என கேட்கப்பட்டுள்ளது. ஞான தர்மம் கொடுப்பது மிகப் புனிதமானது. ஆன்மிக வரப்பிரசாதமாக உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்