பொது அறிவை வளர்க்கும் கேள்வி –பதிலாக அமைந்துள்ள நுால். நீண்ட கேள்விகளுக்கு சுருக்க விடை அமைந்துள்ளன.
பொதுத்தகவல்கள் மனதில் பதியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில் உலகின் பிரமாண்டமான கட்டடங்கள் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அருங்காட்சியகம், பெரிய கோபுரங்கள், மிகப்பெரிய கல்லறைகள், வியக்கும் கோவில்கள் என வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கேள்விக்கு அருகிலேயே விடையும் தரப்பட்டுள்ளது. இது, எளிதாக நினைவில் பதிய வசதியாக உள்ளது. சில வித்தியாசமான கேள்விகளும் அமைந்துள்ளன. உதாரணத்துக்கு, புயல் காற்றின் வேகம் பற்றியது. அதுபோல் சூரியனின் ஒளிக்கதிர் பூமியை அடைய எடுக்கும் நேரம் எவ்வளவு போன்று அமைந்து அறிவூட்டும் நுால்.
– ராம்