முகப்பு » கவிதைகள் » மனத்தின் மகரந்தங்கள்

மனத்தின் மகரந்தங்கள்

விலைரூ.650

ஆசிரியர் : புதுவயல் செல்லப்பன்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். சமயம், நாடு, சமூகம் மீதான பொதுத் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

வள்ளுவர், இளங்கோவடிகள், மஹாத்மா காந்தி, பாரதியைப் போற்றும் பாடல்களும் உள்ளன. நேரு, இந்திரா, தீரன் சின்னமலை, கவிமணி, பரலி.சு. நெல்லையப்பர் புகழ் கூறும் பாடல்களும் உள்ளன. தனிநபர்கள் மீது பாடப்பட்ட வாழ்த்துப்பாடல்கள், இரங்கல் பாடல்களும் நிறைந்துள்ளன.

தேசியம், நாட்டுப்பற்று, மதச்சார்பின்மை, தன்னம்பிக்கை, உழைப்பு, விருந்தோம்பல் போன்ற பொருண்மைகளில் சமூக மேம்பாடு சார்ந்த கருத்தோட்டங்களையும் காண முடிகிறது. எதுகை மோனைகள் கொண்டு எளிமையாகப் படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us