இயற்கை மருத்துவம் மற்றும் காற்றை பயன்படுத்தி நோயில்லாமல் வாழும் முறையை எடுத்துரைக்கும் நுால்.
‘காற்றுப்பையை விரித்து நிரப்பு, சோற்றுப் பையை நிரப்பாமல் சுருக்கு, சும்மா வை. கழிவுப் பையை காலியாக்கு, சுத்தம் செய். அறிவுப் பையை அகலமாக விரித்து அதிகம் சேர்! ஞானப் பையை நிரப்பி ஞாலத்திற்கு கொடு! குறையாது அது’ என்று வகைப்படுத்தி வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறது.
சூரிய ஒளியை பயன்படுத்துவது, சூரிய ஆற்றலால் உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் பற்றி எடுத்துரைக்கிறது. உணவை சமைத்தால் செத்துவிடுவதாக சொல்கிறது. சுவை கூட்ட போடப்படும் உப்பு, வயிற்றுக்கு கூடுதல் சுமையைக் கொடுப்பதாக எளிமையாகத் தெரிவிக்கிறது.
– முகிலை ராசபாண்டியன்