மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் நமக்கு ஒரு கருத்து ஏற்படுவது இயல்பு; அது படிப்பவர் மனதிற்கேற்ப மாறும். அதே சமயம் அந்த கதாபாத்திரம் தன்னை பற்றி என்ன நினைக்கிறது என்று நாம் சிந்தித்தது உண்டா? அவ்வாறு மாறுபட்ட சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ள நுால்.
தந்திரங்களால் பாண்டவர்கள் வெற்றி பெற கண்ணன் செய்தது சரியா என்ற கேள்விக்கு, ‘கவுரவர் தரப்பு சதித் திட்டங்களையும், தந்திரங்களையும் எதிர் கொண்டு அழித்து நன்மை பிறக்க, தர்மம் தழைக்க உபாயங்களை கடைப்பிடிக்க வேண்டி இருந்தது...’ என்று கூறுவதாக உள்ளது. மகாபாரத கதாபாத்திரங்கள் குறித்த வித்தியாசமான படைப்பு நுால்.
-–- இளங்கோவன்