ஆராய்ச்சியாளராக அமெரிக்காவில் பணிபுரிந்த மகனை காணச் சென்ற தந்தையின் பயணக் குறிப்பாக மலர்ந்துள்ள நுால். பள்ளிக் கல்வியை மட்டுமே பெற்றிருந்தும், பயணத்தை அறிவுப்பூர்வமாக உணர்ந்து வெளிப்படுத்தியுள்ள விதம் வியப்பு தருகிறது.
துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, அமெரிக்காவில் பயணம் செய்தது வரை சுயசரிதை போல் எழுதப்பட்டு உள்ளது. அறிவார்ந்த நிலையில் மிகத் துல்லியமான சம்பவங்கள், காட்சியாக பதிவாகியுள்ளன.
பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் தெளிவான பார்வையுடன் தரப்பட்டுள்ளது. எழுதியவரின் மறைவுக்கு பின், குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, அது புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயியின் சுவாரசியம் மிக்க பயண அனுபவ நுால்.
– ஒளி