சங்க இலக்கியத்தில் காதல் களங்களை, திருக்குறள் காமத்துப்பாலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து விளக்கும் நுால். திணைக்கோட்பாட்டை முன்வைத்து விரிவாக அலசுகிறது.
காமம் சார்ந்த உணர்ச்சியை ஐந்திணை பின்புலத்தில் ஆய்ந்து திருக்குறள் உணர்ச்சிகளை ஒப்பீடு செய்கிறது. நட்பு, காதல், காமம் என்று அகவாழ்க்கையை எடுத்துரைத்து விவாதிக்கிறது.
திருக்குறள் திணைக்கோட்பாட்டிற்குள் அமையவில்லை என்கிறது. திருக்குறளில் மறைபொருளாக இருக்கும் அகப்பொருள் மற்றும் உரிப்பொருள் மரபுகளைச் சுட்டிக் காட்டுகிறது. திருக்குறளில் உரிப்பொருள் அடிப்படையிலான பகுப்பு முறைகளை விளக்குகிறது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு